Skip to main content

Tamilaga Vettri Kazhagam

விஐடி பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையிலான குழுவினரை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் VIT பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையிலான நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, வேலூர் விஐடி (VIT) பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, உயர்கல்வி மற்றும் பல்வேறு வளர்ச்சி அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் ஆர். சுகுமார் மற்றும் ஆசிரியர் குழுவினரை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை ஆசிரியர் ஆர். சுகுமார் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.

NDTV நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் NDTV நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ராகுல் கன்வால் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, என்டிடிவி (NDTV) நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ராகுல் கன்வால் தலைமையிலான உயர்மட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கோயம்பேட்டில் 45 MLD மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்

சென்னை கோயம்பேட்டில் உள்ள 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்யும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நலம் தமிழ்நாடு’ திட்டத்திற்கு ₹1 கோடி காசோலை வழங்கிய காவேரி குழும மருத்துவமனை நிர்வாகிகள்; முதலமைச்சர் விஜயை சந்தித்தனர்

சென்னை தலைமைச் செயலகத்தில் “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்காக ₹1 கோடி காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களிடம் வழங்கும் காவேரி குழும மருத்துவமனையின் நிர்வாகிகள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை காவேரி குழும மருத்துவமனையின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்காக ₹1 கோடி மதிப்பிலான காசோலையை வழங்கினர்.

இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நலம் தமிழ்நாடு’ திட்டத்திற்கு ₹1 கோடி நன்கொடை வழங்கிய பனிமலர் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள்; முதலமைச்சர் விஜயை சந்தித்தனர்

சென்னை தலைமைச் செயலகத்தில் “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்காக ₹1 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலையை முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களிடம் வழங்கும் பனிமலர் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை பனிமலர் பொறியியல் கல்லூரியின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, “நலம் தமிழ்நாடு” திட்டத்திற்காக ₹1 கோடி மதிப்பிலான வங்கி வரைவோலையை வழங்கினர்.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் அமைப்பாளர் டாக்டர் கே. ராமசாமி மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் அமைப்பாளர் டாக்டர் கே. ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் மேம்பாடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தலைவர் ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தலைவர் (தகவல் தொழில்நுட்ப வன்பொருள் மற்றும் புதிய திட்டங்கள்) ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.