Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னை தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல், நீர்வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் திறமையான பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல், மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் திட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க நீண்டகால நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

#CMJosephVijay‌

இந்தப் பக்கத்தை பகிருங்கள்