Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள்

இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர் தலைமையிலான அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த தினமலர் நாளிதழ் நிர்வாகிகள்

தினமலர் நாளிதழ் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தினமலர் நாளிதழின் பல்வேறு பதிப்புகளின் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், இணை ஆசிரியர் மற்றும் இயக்குநர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்: மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக்க வேண்டும்; பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்

தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவை இடங்களை 543 ஆக நிரந்தரமாக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தொகுதி மறுவரையறை தொடர்பாக, மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கவும், மாநிலங்களுக்கிடையேயான மக்களவை இடங்களின் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும், வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடத்தி, “போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்” விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலைத் தடுப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையிலான கிறித்துவ, இஸ்லாமிய அமைப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த பொருளாதார நிபுணர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்த பொருளாதார நிபுணர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, இந்தியப் பொருளாதார நிபுணரும் ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்

விவசாயிகளின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், விவசாயப் பெருமக்களின் நலனுக்காக நெல் மற்றும் கரும்பிற்கான மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்: அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் “தமிழ்த்தாய் வாழ்த்து” கட்டாயம் பாட அரசினர் தனித் தீர்மானம்

“தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழிந்து உரையாற்றினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. கோமுகி மணியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோமுகி மணியன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன் என்ற கோமுகி மணியன் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரங்கற் குறிப்பு வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.08.2026) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டனர். தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் […]