முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” வெளியிட்டார்

இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலரை” முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களை இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே தமிழ்” சேனலைத் தொடங்கி வைத்தார்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே தமிழ்” சேனலைத் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டைத் தொடங்கி வைத்தார்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரத் திருநாள் சிறப்புரையாற்றினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார்

சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மக்களுக்கு சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்

தியாகிகளையும் தேசத் தலைவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, சமத்துவம், சமூகநீதி மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ் தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.