
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் மருத்துவத்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில், G+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதற்கட்டமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.84 கோடி மதிப்பீட்டில், G+8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.