
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தி அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் 3 லட்சத்து 16 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.
பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்காக, அரசு ஒரு மாதத்திற்கு ரூ.30 கோடியும், ஒரு ஆண்டிற்கு ரூ.360 கோடியும் செலவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.