தமிழ்நாட்டில் GCC மையங்கள் விரிவாக்கம் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) நிறுவவும் விரிவுபடுத்தவும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.9.2026) சென்னை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய ஃபோர்டு நிறுவன உயரதிகாரிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய மற்றும் இந்திய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்திய டிடாகர் ரெயில் சிஸ்டம்ஸ் நிறுவன நிர்வாகிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் டிடாகர் ரெயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் ரயில்வே மற்றும் தொழில்துறை சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.