
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.07.2026) தலைமைச் செயலகத்தில், அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு (Ford) நிறுவனத்தின் உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பில் ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. மேத்யூ கோட்லெவ்ஸ்கி (Matthew Godlewski), நிர்வாக இயக்குநர் திருமதி சிமோனெட்டா வெர்டி (Simonetta Verdi), ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் திரு. தீரஜ் தீக்ஷித், Country Director முனைவர் ஸ்ரீபாத் பட், இயக்குநர் திரு. வி. ராஜா விமல குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.