Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (20.07.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் (Coaches), சரக்கு வாகனங்கள் (Wagons), கப்பல் கட்டுமானம் மற்றும் ரயில்வே உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிடாகர் ரெயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (Titagarh Rail Systems Ltd.) நிறுவனத்தின் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. உமேஷ் சௌத்ரி, துணை நிர்வாக இயக்குநர் திரு. பிரிதிஷ் சௌத்ரி, பொது மேலாளர் திரு. ஹெச். எஸ். விக்டர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முதலமைச்சருடன் கலந்துரையாடினர்.

இந்தப் பக்கத்தை பகிருங்கள்