Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ₹274.46 கோடியில் கட்டப்பட்ட உயர்கல்வித் துறை கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார்

₹274.46 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்கல்வித் துறையின் கல்விசார் கட்டடங்களை திறந்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் ₹274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

₹112.85 கோடியில் முடிவுற்ற 4 திட்டங்களை திறந்து வைத்து, ₹710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் விஜய்

தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் ₹823.35 கோடி மதிப்பிலான திட்டங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ₹112.85 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்து, ₹710.50 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

₹113 கோடியில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் - ₹113 கோடி மருத்துவக் கட்டடங்கள் திறப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ₹113 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.

காவல், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கிய முதலமைச்சர் விஜய்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் பல்வேறு உயரிய பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

தென்மேற்குப் பருவமழை, குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் சாகுபடி குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் தென்மேற்குப் பருவமழை, குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் சாகுபடி நிலை குறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தென்மேற்குப் பருவமழை நிலவரம், மாவட்டங்களின் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மாத்ருபூமி குழும நிர்வாகிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்

சென்னை தலைமைச் செயலகத்தில் மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் தலைமையிலான நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை, மாத்ருபூமி பிரிண்டிங் & பப்ளிஷிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் தலைமையிலான உயர்மட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஊடகம் மற்றும் மாநில வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடினர்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முதலமைச்சர் விஜயை சந்தித்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ். சௌமியா அவர்களை சந்தித்து பேசும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ். சௌமியா, முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

பல ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 2,920 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் முன்னிலை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் முன்னிலையில் Guidance Tamil Nadu மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் காட்சி.

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இம்முதலீடுகள் மூலம் மாநிலத்தில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து கோரிக்கை புத்தகத்தை வழங்கிய லயோலா மணி

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களிடம் கோரிக்கை புத்தகத்தை வழங்கும் காட்சி.

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் ஆலோசனையின்படியும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, ஆய்வுப் புகைப்படங்களுடன் கூடிய கோரிக்கை புத்தகத்தை அமைச்சரிடம் வழங்கினார்.

நீர்வளத்துறையின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய அமைச்சர் N. ஆனந்த்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நீர்வளத்துறையின் திட்டங்கள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் அமைச்சர் என். புஸ்ஸி ஆனந்த்.

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, நீர்வளத்துறையின் பல்வேறு திட்டங்கள், நீர்நிலைகள் பராமரிப்பு, வெள்ளத்தடுப்பு மற்றும் குடிமராமத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் என். புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.