Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னை கோயம்பேடு அருகிலுள்ள கூவம் நதியில் நீர்நிலைகள் தூர்வாரும் மற்றும் பராமரிக்கும் சிறப்புப் பணிகளை கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். பஸ்ஸி ஆனந்த்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் மூன்று நாள் சிறப்புப் பணிகள் இன்று (27.07.2026) தொடங்கின.

இந்தப் பணிகளின் முதல் நாளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். பஸ்ஸி ஆனந்த், சென்னை கோயம்பேடு அருகிலுள்ள கூவம் நதிப் பகுதியில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு, நீர்நிலைகள் தூர்வாரும் மற்றும் பராமரிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, பணிகள் நடைபெறும் இடத்தை விரைவாக அடைவதற்காக அமைச்சர் பஸ்ஸி ஆனந்த் இருசக்கர வாகனத்தில் களத்திற்கு சென்றடைந்து, அதிகாரிகளுடன் பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்திட்டங்களை ஆய்வு செய்தார்.

#bussyanand

இந்தப் பக்கத்தை பகிருங்கள்