Skip to main content

Tamilaga Vettri Kazhagam

கூவம் நதியில் நீர்நிலைகள் தூர்வாரும் சிறப்புப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் N. ஆனந்த்

சென்னை கோயம்பேடு அருகிலுள்ள கூவம் நதியில் நீர்நிலைகள் தூர்வாரும் மற்றும் பராமரிக்கும் சிறப்புப் பணிகளை கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். பஸ்ஸி ஆனந்த்.

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் மூன்று நாள் சிறப்புப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கோயம்பேடு அருகே கூவம் நதிப் பகுதியில் தொடங்கி வைத்தார்.