இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில் இந்தியா டுடே தமிழ் சேனலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஐ-பேடில் “Let Truth Speak Louder” என எழுதி கையொப்பமிட்டார்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டைத் தொடங்கி வைத்தார்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் – குடற்புழு தொற்று தடுப்பு சிறப்பு முகாம்

தேசிய குடற்புழு தொற்று தடுப்பு நாளை முன்னிட்டு, சென்னை செனாய் நகரில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரைகளை வழங்கி, மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு முகாமை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் என். ஆனந்த் மழைக்கால தொற்றுநோய் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைக்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற பல்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் பங்கேற்று, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
நீர்வளத்துறையின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய அமைச்சர் N. ஆனந்த்

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, நீர்வளத்துறையின் பல்வேறு திட்டங்கள், நீர்நிலைகள் பராமரிப்பு, வெள்ளத்தடுப்பு மற்றும் குடிமராமத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் என். புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூவம் நதியில் நீர்நிலைகள் தூர்வாரும் சிறப்புப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் N. ஆனந்த்

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் மூன்று நாள் சிறப்புப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கோயம்பேடு அருகே கூவம் நதிப் பகுதியில் தொடங்கி வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் (17.07.2026), சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சமூக நீதி விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாணவர்களுக்கான தங்குமிடம், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, தேவையான வசதிகளை மேலும் மேம்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மாணவர்களின் நலன் மற்றும் தரமான தங்கும் சூழலை உறுதி செய்யும் நோக்கில் சமூக நீதி விடுதிகளில் தொடர்ந்து […]