Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ₹525.75 கோடியில் கட்டப்பட்ட 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை திறந்து வைக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ₹525.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

நகர்ப்புற பகுதிகளில் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) சார்பில் சென்னை பெரம்பூரில் ₹1.43 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்