Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் குறித்த தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (04.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியானது முழுமையாக அவர்களின் முன்னேற்றத்திற்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு சட்டம் 20/2024 இயற்றப்பட்டு 29.05.2024 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாநில மன்றத்தின் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி அவர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற அரசின் “வெற்றித் தமிழகம்” தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், 2026-27ஆம் நிதியாண்டிற்கான முதல் மாநில மன்றக் கூட்டம் நடைபெற்றது.

₹6,252.51 கோடி நிதி ஒதுக்கீடு

2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரசின் 23 துறைகளின் மூலம் 48 துறைத் தலைவர்களால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில்,

ஆதிதிராவிடர் நலத்திட்டங்களுக்காக ₹5,903.51 கோடியும், பழங்குடியினர் நலத்திட்டங்களுக்காக ₹349 கோடியும் என மொத்தம் ₹6,252.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளின் விவரங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திட்டங்களை முழுமையாக செயல்படுத்த அறிவுறுத்தல்

2026-27ஆம் நிதியாண்டிற்கான மேம்பாட்டுச் செயல்திட்டங்களை முறையாக செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேம்பாட்டுச் செயல்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதற்கென பயன்படுத்துவதை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்றும், திட்டங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்