Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” வெளியிட்டார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 100 நாள் சாதனை மலரை வெளியிட்டார்

இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலரை” முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களை இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டைத் தொடங்கி வைத்தார்

சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே வட்டமேசை தமிழ்நாடு மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னையில் நடைபெற்ற “இந்தியா டுடே – வட்டமேசை தமிழ்நாடு” மாநாட்டை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ் தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள்

இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர் தலைமையிலான அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த தினமலர் நாளிதழ் நிர்வாகிகள்

தினமலர் நாளிதழ் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தினமலர் நாளிதழின் பல்வேறு பதிப்புகளின் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், இணை ஆசிரியர் மற்றும் இயக்குநர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்: மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக்க வேண்டும்; பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்

தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவை இடங்களை 543 ஆக நிரந்தரமாக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தொகுதி மறுவரையறை தொடர்பாக, மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கவும், மாநிலங்களுக்கிடையேயான மக்களவை இடங்களின் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும், வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

“போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடத்தி, “போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்” விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலைத் தடுப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையிலான கிறித்துவ, இஸ்லாமிய அமைப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.