Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார் தொல். திருமாவளவன்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த தொல். திருமாவளவன்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர்” வெளியிட்டார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் 100 நாள் சாதனை மலரை வெளியிட்டார்

இவ்வரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளை விளக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட “மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலரை” முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெளியிட்டார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வருகையில்லா ஆவணப்பதிவு முறையைத் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களை இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ் தலைமையிலான நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள்

இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அதிகாரிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் உமா சங்கர் தலைமையிலான அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த தினமலர் நாளிதழ் நிர்வாகிகள்

தினமலர் நாளிதழ் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தினமலர் நாளிதழின் பல்வேறு பதிப்புகளின் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், இணை ஆசிரியர் மற்றும் இயக்குநர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையிலான கிறித்துவ, இஸ்லாமிய அமைப்புகள்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்த நிகழ்வு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த பொருளாதார நிபுணர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்த பொருளாதார நிபுணர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, இந்தியப் பொருளாதார நிபுணரும் ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் த. சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்களுடன் 25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆலோசனை

25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள்

தமிழ்நாடு முழுவதும், டெல்டா மாவட்டங்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலந்தாய்வு செய்த நிகழ்வின் புகைப்படம்.