
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
அபிநயா ராஜராஜன் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அவரது வெற்றி தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும், தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து நாட்டின் பெருமையை உலக அரங்கில் மேலும் உயர்த்திட வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.