
நிகழ்ச்சியில் உரையாற்றிய CTR நிர்மல் குமார், சட்டத் துறையின் வளர்ச்சிக்கும் வழக்கறிஞர்களின் அறிவுத்திறன் மேம்பாட்டிற்கும் இத்தகைய கருத்துப் பரிமாற்ற நிகழ்வுகள் முக்கியப் பங்காற்றுகின்றன என்று குறிப்பிட்டார்.
மேலும், சட்டத்தின் மாண்பை உயர்த்தி, நீதி வழங்கும் அமைப்பை மேலும் வலுப்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ், துணைத் தலைவர் எஸ். சசிகுமார், செயலாளர் எஸ். அறிவழகன், பொருளாளர் ஜி. ராஜேஷ் மற்றும் சங்கத்தின் மூத்த, இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.