
சென்னை தலைமைச் செயலகத்தில், மின்சாரம், சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
மாநிலத் தலைவர் ஹைதர் அலி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுச் செயலாளர் திருப்பூர் ஹாலிதீன் தலைமையில், மாநில செயலாளர் திண்டுக்கல் ஜமால் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மேலும், இந்த கோரிக்கைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்து இயக்கப் படிவங்களும் அமைச்சரிடம் வழங்கப்பட்டன.