Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – விதி 110-ன் கீழ் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நலன் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரோபோடிக் அறுவை சிகிச்சை, Linear Accelerator (LINAC) உள்ளிட்ட கதிர்வீச்சு சிகிச்சை, நவீன கருவிகள் மற்றும் இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106 கோடியே 17 இலட்சம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1.22 லட்சம் பெண்களுக்கு HPV DNA பரிசோதனை, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.8 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

மருத்துவர்களுக்குப் பயிற்சியும், நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவும் வழங்குவதற்காக ரூ.2 கோடியே 77 இலட்சம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

#CMJosephVijay #CMVijayNews

இந்தப் பக்கத்தை பகிருங்கள்