
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் புற்றுநோய் சிகிச்சை மற்றும் பராமரிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் “முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்” (Chief Minister’s Cancer Care Mission) செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்திற்காக ரூ.673 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம் புற்றுநோய் தடுப்பு, பரிசோதனை, ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் சிகிச்சை வசதிகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு மேம்பட்ட புற்றுநோய் மருத்துவ சேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.