Skip to main content

Tamilaga Vettri Kazhagam

திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு மற்றும் 400 வேலைவாய்ப்புகளுக்கான வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் (Wilson Power Solutions)’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முதலீட்டின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் மின்சாதன உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் திரு. ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் திரு. டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. அவர்களும் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்