Skip to main content

Tamilaga Vettri Kazhagam

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல்.

தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்