Skip to main content

Tamilaga Vettri Kazhagam

பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து நன்றி தெரிவித்தனர்
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்புக்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த திரு. ஜி. சுப்பிரமணியன், திரு. எஸ்.டி. கதிரேசன் மற்றும் உள்ளூர் விவசாயப் பெருமக்கள் சந்தித்தனர்.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்தமைக்காக, அவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்