
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டப் போட்டி (Sailing) பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
அவரது இச்சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் நேத்ரா குமணன் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.
எதிர்காலத்திலும் நேத்ரா குமணன் பல வெற்றிகளைப் பெற்று புதிய சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்!