Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் (17.07.2026), சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள சமூக நீதி விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாணவர்களுக்கான தங்குமிடம், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, தேவையான வசதிகளை மேலும் மேம்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மாணவர்களின் நலன் மற்றும் தரமான தங்கும் சூழலை உறுதி செய்யும் நோக்கில் சமூக நீதி விடுதிகளில் தொடர்ந்து […]

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து பேசினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் இன்று (17.07.2026) தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு இணையவழியில் சுய விவரங்களைப் பதிவு செய்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு, முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.07.2026) தலைமைச் செயலகத்தில் இணையவழியில் தனது சுய விவரங்களைப் பதிவு செய்து மக்கள்தொகை கணக்கெடுப்பில் பங்கேற்றார்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு இணையவழி சுய விவரப் பதிவு: முதலமைச்சருக்கு அதிகாரிகள் நன்றி

தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு, இணையவழியில் சுய விவரங்களைப் பதிவு செய்தமைக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்தாவலே முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்தார்

மாண்புமிகு ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்தாவலே அவர்கள், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து மரியாதை நிமித்தமாக கலந்துரையாடினார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தலைவர் முதலமைச்சரை சந்தித்தார்

டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர் திரு. பெஞ்சமின் லின் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

UNICEF பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்தித்தனர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.7.2026) தலைமைச் செயலகத்தில், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) இந்தியாவிற்கான பிரதிநிதி திருமதி சிந்தியா மெக்காஃப்ரி (Ms. Cynthia McCaffrey), யுனிசெஃப் சென்னைக்கான பொறுப்புத் தலைவர் மற்றும் சமூகக் கொள்கை நிபுணர் (குழந்தைப் பாதுகாப்பு) திரு. கணேசன் குமரேசன் மற்றும் உயர் அலுவலர்கள் திரு. ஷியாம் சுதீர் பண்டி, முனைவர் அகிலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.