Skip to main content

Tamilaga Vettri Kazhagam

வியாசர்பாடி கேப்டன் காட்டன் கால்வாயில் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய்

CM Joseph Vijay inspecting flood prevention and canal cleaning works at Captain Cotton Canal in Vyasarpadi, Chennai, on 15 October 2026

சென்னை வியாசர்பாடியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றி, மழைநீர் தடையின்றிச் செல்ல மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (15.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் புதிய தரவு மையத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

Tamil Nadu Chief Minister CM Joseph Vijay and Singapore Deputy Prime Minister Gan Kim Yong inaugurating CapitaLand Data Centre Chennai 01 in Ambattur on 15 October 2026

சென்னை அம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கேப்பிட்டாலேண்ட் தரவு மையம் சென்னை 01-ஐ தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் திரு. கான் கிம் யோங் ஆகியோர் 15.10.2026 அன்று திறந்து வைத்தனர்.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்த இந்திய இராணுவ உயர் அதிகாரிகள்

CM Joseph Vijay meeting Indian Army officers at the Tamil Nadu Secretariat on 14 October 2026

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களைத் தலைமைச் செயலகத்தில் இந்திய இராணுவ தெற்கு ஆணையகத் தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர் மற்றும் இராணுவ தென்னிந்தியப் பகுதி தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் உல்ஹாஸ் கிர்பேகர் ஆகியோர் 14.10.2026 அன்று சந்தித்துப் பேசினர்.

விஜயவாடா உத்சவ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் – சந்திரபாபு நாயுடு பங்கேற்பு

CM Joseph Vijay and Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu at Vijayawada Utsav on 13 October 2026

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் 13.10.2026 அன்று நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களுடன் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற நேத்ரா குமணனுக்கு பாராட்டு – ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நேத்ரா குமணன்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டம் பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நேத்ரா குமணனுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“வெற்றிப் பயணம்” திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்

வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று “வெற்றிப் பயணம்” திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் தொடங்கி வைத்தார்.

அபிநயா ராஜராஜனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜன்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டில் 4×400 மீட்டர்: விஷால், ராஜேஷுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

ஆசிய விளையாட்டு 2026: வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஷால் மற்றும் ராஜேஷுக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஜா குழும முதலீடுகள் குறித்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜயுடன் ஆலோசனை – அசோக் லேலண்ட், ஃபினோலெக்ஸ் நிர்வாகிகள் சந்திப்பு

அசோக் லேலண்ட் மற்றும் ஃபினோலெக்ஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்த காட்சி

இங்கிலாந்து இலண்டனில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை அசோக் லேலண்ட் மற்றும் ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு, 400 வேலைவாய்ப்புகள் – வில்சன் பவர் சொல்யூஷன்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு மற்றும் 400 வேலைவாய்ப்புகளுக்கான வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இங்கிலாந்தின் இலண்டன் நகரில், தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.