Skip to main content

Tamilaga Vettri Kazhagam

Vishal and Rajesh, Tamil Nadu athletes in India's 4×400m relay team at Asian Games 2026
Asian Games 2026: Tamil Nadu athletes Vishal and Rajesh, members of India’s bronze-medal winning 4×400m relay team.

ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் ஆண்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோரின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் குழு ஒருங்கிணைப்பு ஆகியவை வெற்றியை நோக்கிப் பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

எதிர்காலத்திலும் வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் பல்வேறு வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Joseph Vijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்