
சென்னை உயர்நீதிமன்றத்தின் மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் சி.டி.ஆர். நிர்மல் குமார் அமைச்சர் கலந்து கொண்டு, வழக்கறிஞர்கள், மூத்த சட்ட வல்லுநர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்தோருடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைப்பது, நீதிமன்ற உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது, வழக்கறிஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான நீதி கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவை தமிழ்நாடு அரசின் முக்கிய முன்னுரிமைகளாகும் என்று தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீதித்துறையை மேலும் வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டை நீதி நிர்வாகத்தில் முன்னோடி மாநிலமாக உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார்.