Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களிடம் கோரிக்கை புத்தகத்தை வழங்கும் காட்சி.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் ஆலோசனையின்படியும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி அவர்கள், ஆய்வுப் புகைப்படங்களுடன் கூடிய கோரிக்கை புத்தகத்தை இன்று (29.07.2026) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் புகைப்படங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கோரிக்கைகள் அடங்கிய புத்தகம் இந்தச் சந்திப்பின்போது அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததாக லயோலா மணி தெரிவித்துள்ளார்.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்