Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி “திறன் 2026” பயிலரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்

அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் திறன் 2026 பயிலரங்கை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றிய லயோலா மணி

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற “திறன் 2026” பயிலரங்கத்தை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். தமிழில் மருத்துவப் பாடநூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் அவர் பேசினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து கோரிக்கை புத்தகத்தை வழங்கிய லயோலா மணி

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களிடம் கோரிக்கை புத்தகத்தை வழங்கும் காட்சி.

முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் ஆலோசனையின்படியும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி, ஆய்வுப் புகைப்படங்களுடன் கூடிய கோரிக்கை புத்தகத்தை அமைச்சரிடம் வழங்கினார்.