Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவை இடங்களை 543 ஆக நிரந்தரமாக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543 ஆக நிரந்தரமாக்கவும், பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.08.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.

தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

அதன்படி, நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவ அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு

அதேபோல், பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனை தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்தார்.

வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பின்னர் நடைபெறும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்