
அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்கள் இன்று (09.08.2026) மதுரை மாவட்டம் ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நல்லூர் – குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து சேவை, கிராம மக்களின் அன்றாட போக்குவரத்து தேவைக்கு பெரும் பயனளிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக, மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட கிராம மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக எளிதாகப் பயணம் மேற்கொள்ள இந்தப் புதிய பேருந்து சேவை உதவியாக இருக்கும்.
மக்களின் தேவைகளை நேரில் அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடிவது மனநிறைவை அளிப்பதாக அமைச்சர் CTR நிர்மல் குமார் தெரிவித்தார்.
“மக்களின் தேவையே எனது முன்னுரிமை… மக்கள் நலனே எனது தொடர்ச்சியான பயணம்!” என்று அவர் குறிப்பிட்டார்.