Skip to main content

Tamilaga Vettri Kazhagam

25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள்
தமிழ்நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவசாயிகளின் குறைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும், அமைச்சர்கள் N. ஆனந்த், செங்கோட்டையன், CTR. நிர்மல் குமார், வெங்கட்ரமணன், ராஜ்மோகன், V. காந்திராஜ் மற்றும் R. வினோத் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து அமைச்சர்கள் அவர்களுடன் விரிவாக கலந்தாய்வு மேற்கொண்டனர்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறித்த விவரங்கள் உடனடியாக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்