
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (07.08.2026) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு கைத்தறி சார்ந்த திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் “வெற்றித் தறி” விற்பனையகம் மற்றும் அதன் மின்-வணிகத்தளம் ஆகியவற்றை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
மேலும், 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு, மொத்தம் ₹22.25 இலட்சம் மதிப்பிலான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.