
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் (27.07.2026), சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் (CMWSSB) சார்பில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள 45 மில்லியன் லிட்டர் (MLD) உற்பத்தித் திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் (Reverse Osmosis) முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கழிவுநீரை உயர் தரத்தில் சுத்திகரித்து மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் செயல்முறைகள், நிலையத்தின் உற்பத்தித் திறன், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரை தொழில்துறை மற்றும் பிற தேவைகளுக்கு திறம்பட பயன்படுத்தும் நடவடிக்கைகள், நீர்வளத்தை பாதுகாக்கும் திட்டங்கள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பான எதிர்கால மேம்பாட்டு பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.