
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் இன்று (25.07.2026) நடைபெற்ற செய்தியாளர்கள் அறை திறப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் கலந்து கொண்டு புதிய செய்தியாளர்கள் அறையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழும் ஊடகத் துறையினரின் பணியை மேலும் எளிதாக்கும் நோக்கில் இந்த செய்தியாளர்கள் அறை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செய்தியாளர்களின் அர்ப்பணிப்பும், பொறுப்புணர்வும் ஜனநாயகத்தின் வலிமையாகும். அவர்களின் பணிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குவது அனைவரின் கடமையாகும்” என்று தெரிவித்தார்.