இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் சி.டி.ஆர். நிர்மல் குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொகிதீன் அவர்களை, திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தார்.
திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்கள் அறையை திறந்து வைத்தார் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் பணியை மேலும் எளிதாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய செய்தியாளர்கள் அறையை, தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் இன்று (25.07.2026) திறந்து வைத்தார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தேனியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார்

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.