Skip to main content

Tamilaga Vettri Kazhagam

இன்று (26.07.2026), தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சார்பில், திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “சட்டம் என்பது நீதி, மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை நிலைநிறுத்தும் உயரிய துறையாகும். இன்று பட்டம் பெறும் இளம் சட்டப் பட்டதாரிகள், தங்களது அறிவையும் திறமையையும் சமூக நீதிக்காகவும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அர்ப்பணித்து, நாட்டின் நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்குள்ளது” என்று தெரிவித்தார்.

#ctrnirmalkumar

இந்தப் பக்கத்தை பகிருங்கள்