
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு (Bio-CNG) ஆலையை இன்று நேரில் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, சென்னை மாநகரில் தினமும் உருவாகும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை முழுமையாக உயிரி-எரிவாயு மற்றும் இயற்கை உரமாக மாற்றுவதற்கும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை சாலை அமைப்புப் பணிகள் மற்றும் சிமெண்ட் ஆலைகளில் மாற்று எரிபொருளாக பயன்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.