
மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அவர் பரிசுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், சிலம்பம் போன்ற பாரம்பரிய தமிழர் தற்காப்புக் கலைகளை இளைய தலைமுறையினர் கற்றுத் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் சிலம்பாட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.