
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் உள்ள தொழில் துறை கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு, மனிதவள மேலாண்மை துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் திரு. த. சரத்குமார், BBA, MLA அவர்கள் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை தொடர்பான பல்வேறு பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் திரு. ஜெ. ராதாகிருஷ்ணன், IAS, துறைச் செயலாளர் திரு. சமயமூர்த்தி, IAS உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.