Skip to main content

Tamilaga Vettri Kazhagam

சென்னை தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (28.07.2026), சென்னை தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்கள், புதிய முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

#CMJosephVijay‌

இந்தப் பக்கத்தை பகிருங்கள்