
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிறப்பு விழாவில், காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உயரிய விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.