காவல், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கிய முதலமைச்சர் விஜய்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய் பல்வேறு உயரிய பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.