Skip to main content

Tamilaga Vettri Kazhagam

₹274.46 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்கல்வித் துறையின் கல்விசார் கட்டடங்களை திறந்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (04.08.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில் ₹274 கோடியே 46 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்த புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய கட்டமைப்பு வசதிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் தொடர்பான கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

₹226.38 கோடியில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள்

இதன் முக்கிய பகுதியாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் ₹226 கோடியே 38 இலட்சம் செலவில் பல்வேறு முடிவுற்ற கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை – தரமணி, செங்கல்பட்டு, குரோம்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, சங்கராபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், உதகமண்டலம், ஈரோடு, பெருந்துறை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், மோகனூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, தேனி, மதுரை, அம்பலக்காரன்பட்டி, உசிலம்பட்டி, நாகர்கோவில், தூத்துக்குடி, வேலூர், கடலூர், விருதாச்சலம், இராமநாதபுரம், பரமக்குடி, கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இந்த கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

#CMJosephVijay

இந்தப் பக்கத்தை பகிருங்கள்