Skip to main content

Tamilaga Vettri Kazhagam

முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்த நிகழ்வு
முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு தலைமையிலான கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.08.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் திரு. ஞா. ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் தலைமையில் கிறித்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பில் டாக்டர் பால் தினகரன், அருட்பணி டி. மோகன், அருட்பணி ஜெயசீலன் ஞானாதிக்கம், அருட்பணி டேவிட் பிரகாசம், பாஸ்டர் ஜான் கேலப், ஆயர் அருட்பணி தயானந்த், ஆயர் அருட்பணி டாக்டர் பீட்டர் தாமஸ், ஆயர் அருட்பணி கிறிஸ்டியன் சாம்ராஜ் அற்புதராஜ், அருட்பணி துரைசாமி உள்ளிட்ட கிறித்துவ அமைப்புகளின் பிரதிநிதிகளும், திரு. கே.ஏ.எம். முகமது அபூபக்கர் மற்றும் திரு. ஜவஹர் அலி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

#CMJosephVijay #tvknews TVK

இந்தப் பக்கத்தை பகிருங்கள்