Skip to main content

Tamilaga Vettri Kazhagam

தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு தொழில்துறை சங்கம் சார்பில் இன்று (25.07.2026) நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் அவர்கள் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மீன்வள மேம்பாட்டு கழகம்) மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு. டி. சரத்குமார், BBA, MLA அவர்கள் (மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை) கலந்து கொண்டு தொழில் வளர்ச்சிக்கான அரசின் நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து உரையாற்றினர்.

மேலும், பொறுப்பாளர்கள் திரு. S.K.S.C.N. தர்மராஜ், திரு. ஜே. ராஜ் செல்வின், திரு. பி. தனராஜ் உள்ளிட்டோர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்தப் பக்கத்தை பகிருங்கள்