Skip to main content

Tamilaga Vettri Kazhagam

காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்

காமன்வெல்த் விளையாட்டு 2026 ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்து ₹30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதலமைச்சர் விஜய்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ₹30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு தொழில்துறை சங்கம் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அமைச்சர்கள் திரு. ஏ. ஸ்ரீநாத் மற்றும் திரு. டி. சரத்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.